கர்நாடக மாநிலம் பெங்களூர் யலஹங்கா விமானப்படை தளத்தில் நாளை ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி நடைபெறுகிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஏரோ இந்தியா 2023 (Aero India 2023) எனும் பெயரில் பிரமாண்ட விமான ஷோவாக இது நடைபெறுகிறது. இந்தியாவில் விமான ஷோ 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில், இந்த ஆண்டும் நடைபெறுகிறது. 1996ம் ஆண்டில் இருந்து பெங்களூருவில் இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. உலக தலைவர்கள், விமானத்துறை முதலீட்டாளர்கள், பெரும் விமான உற்பத்தி நிறுவனங்கள் கலந்து கொள்வது வழக்கம். நாளை தொடங்க உள்ள விமான கண்காட்சியில் பல்வேறு விமான சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. மேலும், உலகெங்கிலும் பயன்பாட்டில் இருக்கும் பலதரப்பட்ட விமானங்களை பொதுமக்கள் நேரில் கண்டு ரசிக்க உள்ளனர். முறையான அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே கண்காட்சி நடைபெறும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
இதற்கான முழு விபரங்களை http://www.aeroindia.gov.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு பொதுமக்கள் கண்காட்சியில் கலந்து கொள்வதற்கான டிக்கெட்டை பெற்றுக் கொள்ள முடியும். 3 விதமான டிக்கெட்டுகள் இதற்காக வழங்கப்படுகின்றன. விமானங்களை பார்வையிடும் டிக்கெட், பொது பார்வையாளர் டிக்கெட் மற்றும் வணிக பார்வையாளர் டிக்கெட் என 3 விதமான டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.
பொது பார்வையாளர்கள் எக்ஸ்பிஷனை கண்டுகளிக்க ரூ.2,500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொது பார்வையாளர் மற்றும் விமானங்களை பார்வையிடும் டிக்கெட்டானது வாங்கப்படும் அந்த ஒரு நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். வெளிநாட்டினருக்கு 50 அமெரிக்க டாலர்கள் கட்டணம் ஆகும். இந்திய விருந்தினர் பார்வையாளர்கள் ரூ. 1000 ஆயிரம் செலுத்தினால் போதும்.
இதேபோல், வெளிநாட்டு விருந்தினர் பார்வையாளர்களுக்கு 50 அமெரிக்க டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். பிசினஸ் விசிட்டர்களுக்கு 5,000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியராக இருப்பின் மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும். வெளிநாட்டினர் 150 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும். இந்த விமான கண்காட்சியில் இந்தியாவின் மிக முக்கியமான போர் விமானங்களான ரஃபேல், எஃப்-21, சுகோய் எஸ்யு-57, எல்சிஏ தேஜாஸ், போயிங் எஃப்/ஏ18சூப்பர் ஹார்னெட் உள்ளிட்ட விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விமானங்களை சிறப்பு அனுமதி பெற்றவர்கள் அருகில் இருந்து பார்த்து ரசிக்கலாம். பொது பார்வையாளர்கள் விமான சாகச நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கலாம். விமான கண்காட்சி நடைபெறுவதை முன்னிட்டு பெங்களூரு நகரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செய்தியாளர் : ரோசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.