Home /News /national /

வேலை செய்யுங்கள் அல்லது விருப்ப ஓய்வு பெற்று வெளியேறுங்கள்..பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

வேலை செய்யுங்கள் அல்லது விருப்ப ஓய்வு பெற்று வெளியேறுங்கள்..பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு அஸ்வினி வைஷ்னவ் எச்சரிக்கை

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு அஸ்வினி வைஷ்னவ் எச்சரிக்கை

பிஎஸ்என்எல் அமைப்பை மீட்டுருவாக்கம் செய்ய ரூ.1.64 கோடி நிதியை மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், மூத்த நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ஒழுங்காக வேலை செய்யுங்கள் அல்லது விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு வேலையை விட்டு வெளியேறுங்கள் என  பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பிஎஸ்என்எஸ் அமைப்பின் மூத்த நிர்வாகிகளுடன் அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கடந்த வியாழக்கிழமை ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதற்கு முந்தைய தினம் தான் பிஎஸ்என்எல் அமைப்பை மீட்டுருவாக்கம் செய்ய ரூ.1.64 கோடி நிதியை மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதைத் தொடர்ந்து மூத்த நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

    அதில் அவர் பேசிய ஆடியோ லீக் ஆகியுள்ளது. அந்த ஆடியோவில் அமைச்சர் கூறியதாவது, உங்களுடைய செயல்பாட்டை நான் ஒவ்வொரு மாதமும் முறையாக கணக்கிடுவேன். யார் எல்லாம் வேலை செய்ய விரும்பவில்லையோ அவர்கள் விருப்ப ஓய்வு பெற்று வீட்டுக்குச் செல்லலாம். அல்லது, ரயில்வே துறையில் நடந்தது போல விருப்ப ஓய்வு எடுக்கும் நிலைக்கு நீங்கள் ஆளாவீர்கள். உங்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து விட்டது. இனி நீங்கள் தான் செயல்பட வேண்டும். வேலை செய்யுங்கள் அல்லது வேலையை விட்டு வெளியேறுங்கள் அப்போது தான் இந்த போட்டி நிறைந்த சூழலில் வெற்றி பெற முடியும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் சிறந்த விளைவுகளை நீங்கள் நிகழ்த்தி காட்ட வேண்டும். மாதம் தோறும் உங்கள் பணி அறிக்கையை நான் பார்க்கப்போகிறேன்.

    தற்போது இருக்கும் சூழலில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி என்பது மிகப் பெரியது. இதன் மூலம் உலகில் எந்த அரசும் எடுக்க துணியாத ரிஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ளார். எனவே,பிஎஸ்என்எல் இல் வேலை பார்க்கும் சுமார் 62,000 ஊழியர்களும் முழு அர்ப்பணிப்புடன் வேலை பார்க்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.

    இதையும் படிங்க: மானியங்கள் பயனாளர்களை முறையாக சென்று சேர்கிறதா.. இந்திய ஏழைகளின் தேவை என்ன?

    மேலும், பிஎஸ்என்எல் மற்றும் பிபிஎன்எல் இணைப்பு நடவடிக்கை மூலம் நாட்டின் ஆப்டிக் பைபர் இணைப்பு நீளம் 6.83 லட்சம் கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கிராமங்களுக்கு ஆப்டிக் பைபர் சேவைகள் கிடைத்துள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: BSNL, Government Employees

    அடுத்த செய்தி