ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்றார் அசோக் கெஹ்லாட்!

ஆளுநர் கல்யாண் சிங் பதவி பிரமாணம் செய்து வைக்க அசோக் கெஹ்லாட் 4-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்றார் அசோக் கெஹ்லாட்!
அசோக் கெலட்- சச்சின் பைலட்
  • News18
  • Last Updated: December 17, 2018, 1:46 PM IST
  • Share this:
ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெஹ்லாட்டும் துணை முதலமைச்சராக சச்சின் பைலட்டும் பதவியேற்றுக் கொண்டனர்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதில் இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அதன் அமைச்சர் யார் என்பதில் சற்று குழப்பம் நிலவி வந்த நிலையில், ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக அசோக் கெஹ்லாட் தேர்வு செய்யப்பட்டார். துணை முதலமைச்சராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டனர்.


இந்நிலையில் இன்று ஜெய்ப்பூரில் உள்ள ஆல்பர்ட் மகாலில், இருவருக்கும் பதவியேற்பு விழா நடைபெற்றது. ஆளுநர் கல்யாண் சிங் பதவி பிரமாணம் செய்து வைக்க அசோக் கெஹ்லாட் 4-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக சச்சின் பைலட் பதவியேற்றார்.

இந்த விழாவிற்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தி.மு.க எம்.பி, கனிமொழி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Also see... உதகையில் சான்டா கிளாஸ் ஊர்வலம் 
First published: December 17, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading