BREAKING | நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி

ராஜஸ்தான் அரசு மீதான நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றுள்ளது.

BREAKING | நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி
அசோக் கெல்லாட், சச்சின் பைலட்
  • News18
  • Last Updated: August 14, 2020, 4:17 PM IST
  • Share this:
கடந்த ஒரு மாதமாக ராஜஸ்தான் அரசியலில் வீசி வந்த புயல் திங்கட்கிழமை சச்சின் பைலட் மீண்டும் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டதுடன் ஓய்ந்தது.

இருப்பினும் பேரவையில் தங்கள் பெரும்பான்மையை நிரூபிப்பதில் முதலமைச்சர் அசோக் கெலாட் உறுதியாக உள்ளார். இந்த சூழலில் பேரவை இன்று கூடியபோது, மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Also read... மருத்துவர்கள் மருந்துச் சீட்டில் புரியும்படி எழுதவேண்டும் - ஒடிசா உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்


மீண்டும் அவை கூடிய போது பேரவை விவகாரங்களுக்கான அமைச்சர் சாந்தி குமார் தாரிவால் அரசின் மீது நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முன்வைத்தார். தொடந்து இதன் மீது விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், அசோக் கெலாட் அரசு பெரும்பான்மையை நீரூபித்து வெற்றி பெற்றுள்ளது.
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading