Home /News /national /

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிப்பதால் பெண்கள் அதிகம் கொல்லப்படுகிறார்கள் - அஷோக் கெலாட் சர்ச்சை பேச்சு

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிப்பதால் பெண்கள் அதிகம் கொல்லப்படுகிறார்கள் - அஷோக் கெலாட் சர்ச்சை பேச்சு

ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெலாட்

ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெலாட்

நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கிய பின்னர், பெண்கள் கொலைசெய்யப்படுவது அதிகமாகியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை செய்துவிட்டு, அதற்கு தடயங்கள் இருக்க கூடாது என அந்த பெண்களை கொல்கிறார்கள்- அசோக் கெலாட்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Rajasthan, India
    காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முதலமைச்சருமான அஷோக் கெலாட் கடந்த 5ஆம் தேதியன்று டெல்லியில் பேசிய கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது.

    அஷோக் கெலாட் டெல்லியில் பேசிய காணொளியை, மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் பகிர்ந்துள்ளார். அந்த காணொளியில் அவர், “நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கிய பின்னர், பெண்கள் கொலைசெய்யப்படுவது அதிகமாகியுள்ளது. நான் நாடு முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை கவனித்து கூறுகிறேன். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை செய்துவிட்டு, அதற்கு தடயங்கள் இருக்க கூடாது என அந்த பெண்களை கொன்று வரும் ஆபத்தான போக்கு நாட்டில் தொடர்ந்து வருகிறது” என கூறியுள்ளார்.

    இதற்கு ஸ்வாதி மாலிவால் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார். தொடர்ந்து, “இந்த கருத்தை எவ்வளவு கண்டித்தாலும் அது குறைவாக தான் இருக்கும். நாடு முழுவதும் இன்று பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள். பல சட்ட போராட்டத்திற்கு பிறகும், உண்ணாவிரத போராட்டங்களுக்கு பிறகும், இந்த சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இதுபோலான கருத்துக்கள் பாதிக்கப்பட்டவரின் மன உறுதியை உடைக்கிறது. தலைவர்கள், பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும், இதுபோல் தேவையற்ற கருத்துக்களை வெளியிட கூடாது” என கூறினார். மேலும், “அஷோக் கெலாட் ஒரு பாலியல் குற்றவாளியை போல கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது” என விமர்சித்துள்ளார்.

     



    இதை தொடர்ந்து ஏ.என்.ஐ ஊடகத்துக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத், “கடந்த மூன்று ஆண்டுகளில் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு ராஜஸ்தான் தான் மைய இடமாக திகழ்கிறது. சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மூலம் தங்கள் தோல்விகளை மறைப்பதை விட துரதிருஷ்டவசமானது எதுவும் இருக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

     
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Congress, Nirbhaya Case, Rape case

    அடுத்த செய்தி