ஹோம் /நியூஸ் /இந்தியா /

காங். தலைவர் தேர்தல் - 'பிற எதிர்க்கட்சிகளை அரவணைத்து செல்ல கார்கே தகுதியானாவர்' - அசோக் கெலாட்

காங். தலைவர் தேர்தல் - 'பிற எதிர்க்கட்சிகளை அரவணைத்து செல்ல கார்கே தகுதியானாவர்' - அசோக் கெலாட்

கர்கேவுக்கு அசோக் கெலாட் ஆதரவு

கர்கேவுக்கு அசோக் கெலாட் ஆதரவு

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், பிற எதிர்க்கட்சிகளை அரவணைத்து செல்லும் தகுதியும் கார்கேவுக்கு இருப்பதாக அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Jaipur, India

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆதரவு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 17 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் மூத்த தலைவர் கார்கே மற்றும் திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள அசோக் கெலாட், "காங்கிரஸை எதிர்க்கட்சியாக வலிமைப்படுத்தக்கூடிய திறமை கார்கேவுக்கு உண்டு என தெரிவித்துள்ளார். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், பிற எதிர்க்கட்சிகளை அரவணைத்து செல்லும் தகுதியும் கார்கேவுக்கு இருப்பதாக" அவர் கூறியுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடுவதாக இருந்தது. கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றால், ஒரு நபர் ஒரு பதவி கொள்கையின்படி ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் அசோக் கெலாட்டிற்கு ஏற்படும். அசோக் கெலாட் ராஜினாமா செய்தால் மாநிலத்தில் போட்டியாளரான சச்சின் பைலட்டை முதலமைச்சராக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டிருந்தது. இதனால் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து அவர் போட்டியிலிருந்து விலகினார்.

இதையும் படிங்க: காதலியுடன் ரகசிய ஷாப்பிங் வந்த கணவர்... கடைவீதியில் மனைவியிடம் மாட்டி உதைவாங்கும் வீடியோ வைரல்!

இதையடுத்து சசி தரூருக்கு போட்டியாக கடைசியில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கர்கே களமிறங்கினார். இவருக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட மேலிட ஆதரவு மறைமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, கார்கேவுக்கு தான் வெற்றிவாய்ப்பு அதிகம் என கணிக்கப்படுகிறது. கட்சி தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவு அறிவிக்கப்படவுள்ளது.

First published:

Tags: Congress leader, Mallikarjun Kharge