Home /News /national /

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டி

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டி

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டி

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டி

காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் தலைவர் பதவிக்கு வர மாட்டார்கள் என ராகுல் காந்தி திட்டவட்டமாக இருப்பதாக அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Rajasthan, India
    காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சருமான அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட் கூறுகையில், "தேர்தலில் போட்டியி நான் முடிவு செய்துள்ளேன். வேட்புமனு தாக்கல் குறித்து தேதிகள் விரைவில் முடிவு செய்யப்படும். தற்போதைய நிலையில் நாட்டிற்கு வலுவான எதிர்க்கட்சி தேவை.

    அதை காங்கிரஸ் கட்சியால் தான் பூர்த்தி செய்ய முடியும். நாங்கள் ராகுல் காந்தியிடம் பல முறை தொடர்பு கொண்டு தலைவர் பதவியை ஏற்குமாறு கேட்டுக் கொண்டேம். அதுவே அனைவரின் விருப்பம். ஆனால், காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் தலைவர் பதவிக்கு வர மாட்டார்கள் என ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். எனவே தான் நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்" என்றுள்ளார்.

    காங்கிரஸ் தலைவராக அசோக் கெலாட் தேர்வாகும் பட்சத்தில் முதலமைச்சர் பதவியில் ராஜஸ்தானின் அடுத்த முதமைலச்சராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்படுவார் எனவும் கூறப்படுகிறது. அதேபோல், திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் அசோக் கெலாட்டிற்கு எதிராக தலைவர் தேர்தலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 1998ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சீதாரம் கேசரி இருந்தார். அதற்குப் பின்னர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தான் தலைவர்களாக இருந்து வருகின்றனர். தற்போது ராகுல் களத்தில் இருந்து வெளியேறியதால், 24 ஆண்டுகளுக்குப் பின்னர் காந்தி குடும்பத்தில் அல்லாத ஒருவர் தலைவராக போகிறார்.

    இதையும் படிங்க: 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. சாலையில் 2 கி.மீ. நிர்வாணமாக நடந்து சென்ற அவலம் - உ.பியில் நடந்த கொடூரம்

    அக்டோபர் மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் நாளை முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்து கொள்ளலாம். தேர்தல் நடத்துவதற்கான தேவை ஏற்படும் என்றால், அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறும். இதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவு அறிவிக்கப்படும்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Congress, Rahul gandhi, Shashi tharoor

    அடுத்த செய்தி