• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • லகிம்பூர் வன்முறை: மத்திய அமைச்சரின் மகன் கைது!

லகிம்பூர் வன்முறை: மத்திய அமைச்சரின் மகன் கைது!

ஆஷிஷ் மிஸ்ரா

ஆஷிஷ் மிஸ்ரா

ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் சில கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  • Share this:
    உத்தரப் பிரதேசத்தின்  லகிம்பூர் பகுதியில் விவசாயிகள் மீது காரை ஏற்றிய சம்பவம் தொடர்பாக நேற்று விசாரணைக்கு ஆஜரான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வாகனத்தை மோதச் செய்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில்  4 பேர் உயிரிழந்தனர். வாகனத்தை ஏற்றிக் கொன்றதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நெருக்கமான இரண்டு பேர் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.இதையடுத்து, ஆஷிஷ் மிஸ்ராவை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஆஜராகுமாறு காவல் துறை சம்மன் அனுப்பியிருந்தது.

    எனினும், அவர் ஆஜராகாததால், சனிக்கிழமை காலை ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, ஆஷிஷ் மிஸ்ரா லகிம்பூர் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். குற்றவியல் நடைமுறை 160வது பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

    இதையும் படிங்க:ஜெயில் மஹோத்சவ்: இந்தியாவிலேயே முதல் முறையாக புதுச்சேரியில் சிறை திருவிழா


    அதன்படியே, ஆஷிஷ் மிஸ்ரவை போலீசார் கைது செய்தனர். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் சில கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதியின் உத்தரவுப்படி மாவட்ட சிறையில் நீதிமன்ற காவலில் அவர் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாளை நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. போலீசார் 3 நாட்கள் ஆஷிஷ் மிஸ்ராவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளனர். அவர்களுக்கு அனுமதி கிடைக்குமா என்பது நாளைய தினம் நடைபெறும் விசாரணையில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: