• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • விவசாயிகள் மீது காரை மோதிய விவகாரம்: மத்திய அமைச்சர் மகன் விசாரனைக்கு ஆஜர்

விவசாயிகள் மீது காரை மோதிய விவகாரம்: மத்திய அமைச்சர் மகன் விசாரனைக்கு ஆஜர்

ஆஷிஷ் மிஸ்ரா

ஆஷிஷ் மிஸ்ரா

குற்றவியல் நடைமுறை 160வது பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

  • Share this:
    உத்தரப் பிரதேசம் மாநிலம்  லகிம்பூர் வன்முறையில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மத்திய இணை அமைச்சர்  அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இன்று  குற்றப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

    உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வாகனத்தை மோதச் செய்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில்  5 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம் தனது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தது.

    வாகனத்தை ஏற்றிக் கொன்றதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நெருக்கமான இரண்டு பேர் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.

    இதையடுத்து, ஆஷிஷ் மிஸ்ராவை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஆஜராகுமாறு காவல் துறை சம்மன் அனுப்பியிருந்தது. எனினும், அவர் ஆஜராகாததால், சனிக்கிழமை காலை ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, ஆஷிஷ் மிஸ்ரா லகிம்பூர் குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

    இதையும் படிங்க: ரூ.500, ரூ.2000 நோட்டில் இருந்து காந்தி படத்தை நீக்கவேண்டும்: பிரதமருக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ கோரிக்கை!


    விபத்து ஏற்படுத்திய கார் தனதுதான் என்று ஒப்புகொண்டுள்ள ஆஷிஷ் மிஸ்ரா விபத்தின்போது அதில் தான் இல்லை என்றும் கூறியுள்ளார். குற்றவியல் நடைமுறை 160வது பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் படிக்க: பாஜகவினர் காரில் சென்றால் வீடியோ எடுங்கள்..எப்போது மோதுவார்கள் என்றே தெரியாது’: காங்கிரஸ்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: