தாக்குதலின் போது மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தீர்களா மோடி? – ஒவைஸி

பிரதமர் மோடி மாட்டுக் கறி பிரியாணி சாப்பிட்டுத் தூங்கினாரா? என ஒவைஸி கூறியது, இந்து மதத்தினரின் மனதை புண்படுத்தும் செயல் எனவும் பிரதமர் குறித்து அவதூறு கருத்து கூறியதாகவும் ஒவைஸிக்கு பாஜகவினர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். 

news18
Updated: March 25, 2019, 4:43 PM IST
தாக்குதலின் போது மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தீர்களா மோடி? – ஒவைஸி
ஒவைஸி
news18
Updated: March 25, 2019, 4:43 PM IST
புல்வாமா தாக்குதலின் போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங், மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டு, தூங்கிக் கொண்டு இருந்தனரா என அசாதுதின் ஒவைஸி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அசாதுதின் ஒவைஸி, தெலங்கானாவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஐதராபாத்தில் நடந்த பிரசாரத்தின் போது, ”பாலகோட்டில் இந்திய ராணுவம் குண்டு வீசி நடத்திய தாக்குதலில், 250 பேர் உயிரிழந்தனர் என அமித்ஷாவும், 300 செல்போன்களின் செயல்பாடு அந்த இடத்தில் இருந்ததாக ராஜ்நாத் சிங்கும் கூறி வருகிறார்கள்.

இத்தனை துல்லியமான தொழில்நுட்பம் வைத்திருக்கும் மத்திய அரசால், 50 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்துடன் ஜீப்பில் புல்வாமாவுக்கு வந்த தீவிரவாதியை ஏன் தடுக்க முடியவில்லை” என சனிக்கிழமை அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.

மேலும், ”நான் பிரதமர் மோடியையும் ராஜ்நாத் சிங்கையும் பார்த்து கேட்கிறேன், புல்வாமா தாக்குதல் நடந்த போது, இருவரும் மாட்டுக் கறி பிரியாணி சாப்பிட்டு, தூங்கிக் கொண்டு இருந்தீர்களா?” என பாஜக அரசை கடுமையாக தாக்கிப் பேசினார்.

வரும் மக்களவைத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் எனும் முஸ்லிம் கட்சியின் சார்பில் ஐதராபாத்தில் ஒவைஸி போட்டியிடுகிறார்.
தன்னை பொறுத்தவரையில் பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டுமே மதரீதியான அரசியலையே முன்னெடுத்து வருவதாக கூறினார்.
Loading...
"பிரதமர் மோடி மாட்டுக் கறி பிரியாணி சாப்பிட்டுத் தூங்கினாரா?" என ஒவைஸி கூறியது, இந்து மதத்தினரின் மனதை புண்படுத்தும் செயல் எனவும் பிரதமர் குறித்து அவதூறு கருத்து கூறியதாகவும் ஒவைஸிக்கு பாஜகவினர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...