• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ''இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு காங்கிரஸ்தான் காரணம்; முஸ்லிம்கள் அல்ல'' : உவைசி

''இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு காங்கிரஸ்தான் காரணம்; முஸ்லிம்கள் அல்ல'' : உவைசி

அசாசுதீன் ஓவைசி.

அசாசுதீன் ஓவைசி.

பிரிவினை ஏற்பட்ட நேரத்தில், நவாப்கள், பட்டம் பெற்றவர்கள் போன்ற செல்வாக்கு மிக்க முஸ்லிம்களிடம் மட்டுமே வாக்குரிமை இருந்ததாக உவைசி கூறியுள்ளார்.

  • Share this:
    இந்தியா - பிரிவினை ஏற்பட்டதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்று மஜ்லிஸ் (AIMIM)கட்சியின் தலைவர் அசாசுதீன் உவைசி கூறியுள்ளார்.

    உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுவதையொட்டி, கூட்டணிக்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளன. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கட்சியின் தலைவர் ஓ.பி. ராஜ்பார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

    அந்த அறிக்கையில் 'இந்தியாவின் முதல் பிரதமராக முகம்மது அலி ஜின்னா இருந்திருந்தால், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டிருக்காது' என்று கூறியிருந்தார். அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    இதுகுறித்து மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாசுதீன் உவைசி கூறியதாவது-
    ஆர்.எஸ்.எஸ்., பாஜக, சமாஜ்வாதி கட்சியினர் வரலாற்றை படிப்பது கிடையாது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை முஸ்லிம்களால் ஏற்படவில்லை. அதற்கு ஜின்னாதான் காரணம். பிரிவினை ஏற்பட்ட நேரத்தில், நவாப்கள், பட்டம் பெற்றவர்கள் போன்ற செல்வாக்கு மிக்க முஸ்லிம்களிடம் மட்டுமே வாக்குரிமை இருந்தது. பிரிவைனைக்கு காங்கிரசும், அதன் தலைவர்களும்தான் பொறுப்பேற்க வேண்டும்.
    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2017-ல் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்று முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சியை இழந்த அகிலேஷின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் அதிக இடங்களை கைப்பற்ற கூட்டணி பேச்சுகளை தீவிரப்படுத்தியுள்ளன. பிரியங்கா காந்தியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: