ஹோம் /நியூஸ் /இந்தியா /

டெல்லியில் அமலானது மஞ்சள் எச்சரிக்கை - பள்ளி, ஜிம், திரையரங்குகள் மூடப்பட்டன!

டெல்லியில் அமலானது மஞ்சள் எச்சரிக்கை - பள்ளி, ஜிம், திரையரங்குகள் மூடப்பட்டன!

டெல்லியில் 496 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்தார்.

டெல்லியில் 496 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்தார்.

டெல்லியில் 496 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்தார்.

  • 1 minute read
  • Last Updated :

டெல்லியில் கொரோனா மஞ்சள் எச்சரிக்கை அமலுக்கு வந்ததை அடுத்து மெட்ரோ ரயில்கள், பேருந்துகளில் 50 சதவிகித பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிகள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று முதல் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள் நேரக் கட்டுப்பாடுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் 50 சதவிகித இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Also read... பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள இணை நோய்க்கான சான்றிதழ் தேவையில்லை - மத்திய அரசு!

அரசின் இந்த முடிவிற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தாலும், காலையில் பணிக்கு செல்லும் போது பேருந்து, ரயில்களில் இடம் கிடைக்காமல் காத்திருக்க வேண்டிய சூழலும் உள்ளது.

Also read... புதுச்சேரிக்கும் பரவியது ஒமைக்ரான் - இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

டெல்லியில் 496 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்தார். இதனிடையே டெல்லியில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

First published: