Home /News /national /

சபர்மதி ஆசிரமத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப்... 2010-ல் பராக் ஒபாமா எழுதியது என்ன தெரியுமா?

சபர்மதி ஆசிரமத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப்... 2010-ல் பராக் ஒபாமா எழுதியது என்ன தெரியுமா?

ட்ரம்ப்

ட்ரம்ப்

குஜராத்திலுள்ள சபர்மதி காந்தி நினைவிடத்துக்குச் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பார்வையாளர்கள் புத்தகத்தில் காந்தி குறித்து எழுதாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்திறங்கிய ட்ரம்பை, பிரதமர் மோடி சென்று வரவேற்றார். ட்ரம்புடன் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப்பும் உடன் வந்துள்ளார். அகமதாபாத் விமானநிலையம் வந்திருக்க ட்ரம்ப்பையும் மெலனியா ட்ரம்பையும் மோடி நேரில் வந்து வரவேற்றார்.

பின்னர், மூவரும் சபர்மதியிலுள்ள காந்தி ஆசிரமத்துக்குச் சென்றனர். அங்கே இருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில் எழுதிய ட்ரம்ப், ‘இந்த இடத்தை சுற்றிக் காட்டியதற்காக என்னுடைய மிகச் சிறந்த நண்பர் மோடிக்கு நன்றி’ என்று குறிப்பிட்டிருந்தார். அதில், காந்தி குறித்து எதுவும் எழுதவில்லை. அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, 2010-ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்த அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, எழுதிய வாக்கியங்களும் தற்போது நினைவுகூரப்படுகின்றன. அப்போது பராக் ஒபாமா, ‘காந்தியின் வாழ்க்கையின் சாட்சியங்களாய் இருக்கும் இந்த இடத்தை பார்ப்பதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பின்மூலம், நான் நம்பிக்கையாலும் உத்வேகத்தாலும் நிரப்பப்பட்டுள்ளேன். காந்தி ஒரு நாயகன், இந்தியாவுக்கு மட்டுமல்ல இந்த உலகத்துக்கே’என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:
Published by:Karthick S
First published:

Tags: Trump India Visit

அடுத்த செய்தி