ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்க வேண்டும் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தண்ணீரை சேமிப்பதற்காக நாட்டுமக்களுக்கு 3 வேண்டுகோள்களை விடுத்தார் பிரதமர் மோடி

news18
Updated: June 30, 2019, 4:16 PM IST
ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்க வேண்டும் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
நரேந்திர மோடி
news18
Updated: June 30, 2019, 4:16 PM IST
தண்ணீர் கடவுள் தரும் பரிசு என்றும், ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் வானொலி மூலம் பேசும் மனதின் குரல் நிகழ்ச்சி, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதத்துடன் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் 4 மாதங்களுக்குப் பிறகு இன்று பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பானது. அப்போது தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

தண்ணீர் பிரச்னை குறித்து பேசிய பிரதமர், ‘அசாதாரண சூழலை கூட்டுமுயற்சியால் எதிர்கொள்ளவே ஜல்சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. தண்ணீர் கடவுள் தரும் பரிசு, ஒவ்வொரு துளி தண்ணீரையும் நாம் சேமிக்க வேண்டும் . தண்ணீரை சேமிப்பதற்காக நாட்டுமக்களுக்கு 3 வேண்டுகோள்களை விடுக்கிறேன். முதலாவதாக திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் தண்ணீரை சேமிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும். இரண்டாவதாக தண்ணீரை சேமிப்பதற்கான பாரம்பரிய முறைகளை பகிர வேண்டும். மூன்றாவதாக தண்ணீர் சேமிப்புக்காக பாடுபடும் தனிநபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை அடையாளம் காண வேண்டும். வேலூரில் 20 ஆயிரம் பெண்கள் சேர்ந்து ஆற்றை சீரமைத்துள்ளதை அறிந்து மகிழ்ந்தேன்’ என்று கூறியுள்ளார்.

Also watch

First published: June 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...