எல்லைகளைத் திருத்திய நேபாளம் - கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா

இந்திய எல்லைப் பகுதிகளைத் திருத்தி நேபாளம் வெளியிட்டிருக்கும் அந்நாட்டின் வரைபடத்தை ஏற்க முடியாது என்று இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

எல்லைகளைத் திருத்திய நேபாளம் - கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா
திருத்தப்பட்ட வரைபடம்
  • Share this:
இந்திய எல்லைப் பகுதிகளைத் திருத்தி நேபாளம் வெளியிட்டிருக்கும் அந்நாட்டின் வரைபடத்தை ஏற்க முடியாது என்று இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நேபாளம் நாட்டின் நிலமறுசீரமைப்பு அமைச்சர் பத்மா அர்யால், புதிதாக சீர்திருத்தம் செய்யப்பட்ட அந்நாட்டின் வரைபடத்தை வெளியிட்டார். அந்தப் புகைப்படத்துக்கு அந்நாட்டின் பிரதமர் கே.பி.ஒலி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்த புகைப்படத்தில் லிம்பியாதுரா, லிபுலேகா, கலாபானி நேபாளம் நாட்டின் எல்லைப் பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. நேபாளம் வெளியிட்டிருக்கும் இந்தப் புகைப்படத்துக்கு இந்தியா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவட்சவா, ‘நேபாளத்தின் செயல் ஒருதலைப்பட்சமானது. அது வரலாற்று நிகழ்வின் அடிப்படையிலோ அல்லது ஆவணங்களின் அடிப்படையிலோ ஆனது அல்ல. தன்னிச்சையாக அவர்கள் நாட்டின் பகுதிகளை அதிகரிப்பதை இந்தியா ஏற்றுக்கொள்ளாது’ என்று தெரிவித்துள்ளார்.







சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading