முகப்பு /செய்தி /இந்தியா / இந்தியா ஒரு சிறந்த சந்தை: வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீனிவாசன்

இந்தியா ஒரு சிறந்த சந்தை: வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீனிவாசன்

இந்தியா சிமெண்ட்ஸ் தலைவர்

இந்தியா சிமெண்ட்ஸ் தலைவர்

இந்தியா ஒரு சிறந்த சந்தை என்பதால், வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவுக்கு வர வேண்டும் என்று பிரபல தொழிலதிபரும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன தலைவருமான ஸ்ரீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியா மற்றும் அரபு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில், சென்னை தியாகராய நகரில் ஆசிய - அரேபிய சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் துவக்க விழா நடைபெற்றது. கஜகஸ்தான், மலேசியா, தாய்லாந்து நாட்டின் தூதர்கள் இணைந்து துவக்கி வைத்த நிகழ்வில், பிரபல தொழிலதிபரும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன தலைவருமான ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார்.

நிகழ்வில் பேசிய இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீனிவாசன், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியா வர்த்தகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், சிறந்த உற்பத்தி நாடாக இந்தியா மாறி வருவதாகவும் கூறினார். அண்மையில் தாக்கலான மத்திய பட்ஜெட்டில் குறைகளே இல்லை என்று பேசிய ஸ்ரீனிவாசன், இந்தியா சிறந்த சந்தை என்பதால் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யவும், சேவை வழங்கவும் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

மேலும், இந்தியர்கள் வெளிநாடுகளில் எளிய முறையில் வர்த்தகம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு முன்னெடுத்து வருவதாகவும் ஸ்ரீனிவாசன் பேசினார்.

மேலும் படிக்க...கொரோனா காலத்தில் உயிரிழந்த சுகாதார ஊழியர்களுக்கு நிவாரணம்கிடைக்கவில்லை

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: India, Share Market