பீகார் வெள்ளத்தின் கோர முகம்... மனதைக் கரைய வைக்கும் குழந்தையின் புகைப்படம்...!

சமீபத்தில் மூளைக்காய்ச்சல் காரணமாக 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து அம்மாநிலம் மீளாத நிலையில், தற்போது வெள்ளம் கடும் பாதிப்புகளை கொடுத்துள்ளது.

பீகார் வெள்ளத்தின் கோர முகம்... மனதைக் கரைய வைக்கும் குழந்தையின் புகைப்படம்...!
அர்ஜுன்
  • News18
  • Last Updated: July 18, 2019, 9:02 AM IST
  • Share this:
பீகார் மாநிலத்தில் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் உயிரிழந்த 3 வயது குழந்தையின் புகைப்படம், வெள்ளத்தின் கோர முகத்தை காட்டியுள்ளது.

பீகார் மற்றும் அசாம் மாநிலங்களில் வரலாறு காணாத பெரு மழை பெய்து வருகிறது. அசாமில் மட்டும் மழைக்கு இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
30 மாவட்டங்களைச் சேர்ந்த 40 லட்சம் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.


அசாமின் பிரசித்தி பெற்ற காசிரங்கா பூங்காவின் 90 சதவிகித பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோல் அசாமில் உள்ள போபிதோரா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

2004-ம் ஆண்டுக்கு பிறகு மிகமோசமான வெள்ளத்தை அந்த உயிரியல் பூங்கா சந்தித்துள்ளது. மாநிலம் முழுவதும் 26 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அசாமை விட பீகாரில் நிலமை கடும் மோசமாக உள்ளது. சமீபத்தில் மூளைக்காய்ச்சல் காரணமாக 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து அம்மாநிலம் மீளாத நிலையில், தற்போது வெள்ளம் கடும் பாதிப்புகளை கொடுத்துள்ளது.மழை வெள்ளத்திற்கு இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் 13 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே மேலும் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மழை வெள்ளத்தின் கோர முகத்தை காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகி கல் மனதையும் கரைய வைத்துள்ளது. முசாபர்பூர் பகுதியில் உள்ள ஷீடால்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ரானி தேவி, தனது 4 குழந்தைகளுடன் அருகில் உள்ள ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார். மழை வெள்ளம் காரணமாக ஆற்றில் வழக்கத்தைவிட அதிகமான தண்ணீர் சென்றுள்ளது.

அப்போது, எதிர்பாராத விதமாக 3 வயது அர்ஜுன் என்ற குழந்தை ஆற்றில் தவறவே, காப்பாற்றும் நோக்கத்தில் பதறிப்போய் தாயும் ஆற்றில் குதித்துள்ளார். தாய் குதித்ததைப் பார்த்த மற்ற 3 குழந்தைகளும் ஆற்றில் குதித்துள்ளன.

உடனே, சுதாரித்துக்கொண்ட அருகில் இருந்தவர்கள் ஆற்றில் இறங்கி ரானி தேவி மற்றும் 1 குழந்தையை காப்பாற்றினர். எனினும், 3 குழந்தைகளை தண்ணீர் அடித்துச் சென்றது. இந்நிலையில், குழந்தை அர்ஜுனின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டது.

அர்ஜுனின் சடலத்தின் புகைப்படம் அனைவரையும் உலுக்கியுள்ளது. சமூக ஊடகங்களில் பலரும் அர்ஜுனின் புகைப்படத்தை பதிவிட்டு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நினைக்கிறீர்களா?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் முதலமைச்சர் நிவாரண நிதி மூலமாக உதவலாம். உங்களது செல்போனில் இருந்தே, நிவாரண நிதியை அனுப்பலாம். கீழே குறிப்பிடப்பட்டுள்ள வங்கிக்கணக்கில் நிதியை செலுத்தலாம்...மேலும், உங்களது கூகுள் பே, போன் பே மற்றும் பே டி.எம் வழியாகவும் நிவாரண நிதியை செலுத்தலாம்.
First published: July 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்