குஜராத்தில் வலுக்கும் ‘வாயு’ புயல்... தயார் நிலையில் மீட்புப் படையினர்!

குஜராத்தில் அடுத்த 12 மணி நேரம் கடுமையான காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: June 11, 2019, 8:03 PM IST
குஜராத்தில் வலுக்கும் ‘வாயு’ புயல்... தயார் நிலையில் மீட்புப் படையினர்!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: June 11, 2019, 8:03 PM IST
குஜராத் அருகே வாயு புயல் வலுபெற்று வருவதால் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய பேரிடர் மீட்புப் படையின் 25 குழுக்கள் (குழுவுக்கு 45 பேர் விதம்) குஜராத்தில் களம் இறக்கப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் மாநிலம் முழுவதையும் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளார்.

பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சகம் சார்பிலேயே சுகாதாரம், குடிநீர், மருந்து, தொலைதொடர்பு வசதிகள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

குஜராத்தை ஒட்டியுள்ள மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, டாமன் மற்றும் டய்யூ ஆகிய பகுதிகளிலும் வாயு புயலின் தாக்கம் இருக்கும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஜூன் 13-ம் தேதி குஜராத்தில் வாயு புயல் மணிக்கு 135கிமீ வேகத்தில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத்தில் அடுத்த 12 மணி நேரம் கடுமையான காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை... அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு...!
First published: June 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...