கர்நாடகா இடைத்தேர்தல் - 11 இடங்களில் பாஜக முன்னிலை... ஆட்சியைத் தக்கவைக்கிறார் எடியூரப்பா...!

கர்நாடகா இடைத்தேர்தல் - 11 இடங்களில் பாஜக முன்னிலை... ஆட்சியைத் தக்கவைக்கிறார் எடியூரப்பா...!
எடியூரப்பா. (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: December 9, 2019, 11:01 AM IST
  • Share this:
கர்நாடகாவின் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 11 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளதால், அங்கு எடியூரப்பா தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் தகுதிநீக்க நடவடிக்கையால் 17 எம்.எல்.ஏ.க்கள் தொகுதி காலியாக உள்ளது.

இதில் 2 தொகுதிகள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மீதமுள்ள 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.


இதற்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், ஆரம்பம் முதலே பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் 11 தொகுதியில் முன்னிலையில் உள்ளனர். காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியிலும், இதர கட்சிகள் 1 தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.

பெரும்பான்மையை நிரூபிக்க 6 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், தற்போது 11 வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளதால், கர்நாடகாவில் எடியூரப்பா தனது ஆட்சியை தக்க வைக்க அனுகூலமான நிலை உருவாகியுள்ளது.Also see...
First published: December 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading