ஒரு யோகியாக, அயோத்தியில் அமையவிருக்கும் மசூதி தொடக்க விழாவுக்கு போக மாட்டேன் - உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்
“ஒரு யோகியாக, மசூதி தொடக்க விழாவுக்கு என்னால் போகமுடியாது. ஹிந்து முறைப்படி, என் வழிபாட்டுரிமை எனக்கு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் உபி முதல்வர்

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.
- News18 Tamil
- Last Updated: August 8, 2020, 6:01 PM IST
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் ஒரு பகுதியாக அயோத்தி மசூதி அமைக்கப்படும். அதன் தொடக்க விழாவுக்கு நீங்கள் செல்வீர்களா என்னும் ஏபிபி சேனல் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த உபி முதல்வர் யோகி ஆதித்யாநாத், “ஒரு யோகியாக, மசூதி தொடக்க விழாவுக்கு என்னால் போகமுடியாது. ஹிந்து முறைப்படி, என் வழிபாட்டுரிமை எனக்கு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஒரு முதல்வராக அதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தாலும் சில அரசியல்வாதிகளைப் போல, இஃப்தார் நோன்புக்கு செல்வது, தலையில் தொப்பி அணிவதை என்னால் செய்ய முடியாது என்றும், அது சமத்துவம் அல்ல என்றும் பதில் அளித்திருக்கிறார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், மசூதி கட்டமைப்பில் தான் ஒரு உறுப்பினராக இல்லாததால், என்னை அவர் அழைக்கமாட்டார்கள் எனத் தெரியும் எனவும், தானும் போக விரும்பவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.