இந்திய அரசை நான் நம்புகிறேன்... உலகம் நம்ப வேண்டுமே...? ப.சிதம்பரம் கேள்வி

நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு - சரியான முடிவா? கோடிக்கணக்கான நாள் வேலை பார்ப்பவர்கள், சுய வேலை பார்ப்பவர்கள் திடீரென்று வேலை இழந்தார்களே - சரியான முடிவா?

இந்திய விமானப் படையின் வீர நடவடிக்கையைப் பாராட்டிய முதல் மனிதர் திரு ராகுல் காந்தி என்பதை பிரதமர் மோடி மறந்து விட்டார் என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

 • News18
 • Last Updated :
 • Share this:
  இந்திய குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன். ஆனால் உலகம் நம்ப வேண்டுமே என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

  காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

  இதையடுத்து இந்தியாவின் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான். இதனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது வருகிறது.

  ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்களை இந்திய விமானப்படை அழித்ததாகவும் தகவல் வெளியானது.

  இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் ப.சிதம்பரம், ‘இந்திய விமானப் படையின் வீர நடவடிக்கையைப் பாராட்டிய முதல் மனிதர் திரு ராகுல் காந்தி என்பதை பிரதமர் மோடி மறந்து விட்டார்.

  விமானப் படையின் துணைத் தளபதி உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றி கருத்துக் கூற மறுத்து விட்டார். 300/350 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தியை யார் பரப்பியது?

  இந்திய குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன். ஆனால் உலகம். நம்ப வேண்டுமே? அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு?’ என்று கேள்வி எழுபியுள்ளார்.  முன்னதாக புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்ததில் 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பா.ஜ.க.வின் தேசியத் தலைவரான அமித்ஷா குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியது குறிப்பிடத்தக்கது.

  Also watch

  Published by:Prabhu Venkat
  First published: