காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். நாம் இழந்தவர்கள், நம்மைக் காத்தவர்கள், நமக்காகத் தியாகம் செய்தோரை நினைவில் கொள்வோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
வெளிநாடு சென்றுள்ள ராகுல் காந்தி நள்ளிரவில் இந்தப் பதிவை வெளியிட்டார்.
“என் இதயம் விவசாயிகளிடத்திலும் அநீதிச் சக்திகளை எதிர்த்து கவுரவத்துடனும் மரியாதையுடனும் போராடும் தொழிலாளர்களிடத்திலும் உள்ளது.” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் விவசாயச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், இவர்களுக்காக ராகுல் காந்தி தொடர்ந்து தன் ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியே விவசாயச் சட்ட சீர்த்திருத்தத்திற்காக லோக்சபாவில் பேசியதான வீடியோ ஒன்றை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் ராகுல் காந்தி தொடர்ந்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
டிசம்பர் 24ம் தேதியன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திக்க பேரணி மேற்கொண்டார், அதாவது விவசாயிகள் விஷயத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்றார்.
பிறகு செய்தியாளர்களிடம், “இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறது என்று நம்புவோர் தங்கள் கற்பனையில்தான் ஜனநாயகம் உள்ளது என்பதை உணர வேண்டும்” என்று கூறினார்.
ராகுல் காந்தி தற்போது இத்தாலியின் மிலன் நகருக்குச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 2021, New Year 2021, Rahul gandhi