• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஆர்யன் கான் வழக்கு விசாரணை அதிகாரி நீக்கம்..

ஆர்யன் கான் வழக்கு விசாரணை அதிகாரி நீக்கம்..

ஆர்யன் கான் வழக்கு

ஆர்யன் கான் வழக்கு

ஆர்யான் கானை விடுவிக்க, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவுக்கு 8 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார்.

  • Share this:
    நடிகர் ஷாருக் கான் மகன் மீதான வழக்கு உள்ளிட்ட 6 வழக்குகள் குறித்த விசாரணை, மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி வான்கடேவிடம் இருந்து, டெல்லி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சொகுசு கப்பலில் நடந்த போதைப் பொருள் விருந்து தொடர்பாக, நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யான் கானுக்கு கடந்த 28ம் தேதி மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த விவகாரத்தில் ஆர்யான் கானை விடுவிக்க, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவுக்கு 8 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    மேலும் பல்வேறு வழக்குகளில் அவர்கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டினார். இந்நிலையில் ஆர்யன் கான்போதைப் பொருள் வழக்கில் இருந்து விசாரணை அதிகாரி சமீர் வான்கடே நீக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், ஆர்யான் கான் உள்ளிட்ட 6 வழக்குகள் குறித்த விசாரணை, வான்கடேவிடம் இருந்து டெல்லியில் உள்ள சிறப்பு விசாரணைக்குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ அல்லது என்ஐஏ விசாரிக்க உத்தரவிட கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில்,  மனு தாக்கல் செய்ததாக கூறியுள்ள வான்கடே, தாம் பணியிடம் மாற்றப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: