யார் இந்த ஆர்யா ராஜேந்திரன்? நாட்டின் இளம் மேயரை பற்றி தெரிந்துகொள்ளவேண்டியது என்ன?

யார் இந்த ஆர்யா ராஜேந்திரன்? நாட்டின் இளம் மேயரை பற்றி தெரிந்துகொள்ளவேண்டியது என்ன?

ஆர்யா ராஜேந்திரன்

ஆர்யாவின் பெற்றோர் நீண்ட காலமாக கட்சியில் இருக்கிறார்கள். அவரது அப்பா ஒரு எலக்ட்ரீசியன். அம்மா எல்.ஐ.சி முகவராக இருக்கிறார் எனக் கூறுகிறார் சி.பி.எம்மைச் சேர்ந்த கட்சித் தொண்டர் ஒருவர்.

  • Share this:
21 வயதான ஆர்யாவின் பெயர் மேயராக முன்மொழியப்பட்டபோது புருவங்கள் உயர்ந்தன. ஆனால் அவரை நோக்கிய செய்தியாளர்கள் வைத்த கேள்விகளுக்கு நம்பிக்கையான பதில்களை துடிப்புடன் பதிவு செய்துகொண்டிருக்கிறார்.

திருவனந்தபுரத்தில் உள்ள சிபிஎம் மாவட்ட செயலாளர் அனவூர் நாகப்பன், ஆர்யா மேயராக பதவியேற்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரத்தின் மேயராக பதவியேற்க போகிறார் என்பதும், இத்தனை இள வயதில் மேயராகும் முதல் நபர் என்பதும் பலரையும் புருவம் உயர்த்தவைத்தது.

தகவல் தெரிந்ததும், உள்ளாட்சி தேர்தலில் அவர் வென்ற தொகுதியான முடவன்முகலில் அவரை வரவேற்க தெருக்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குவிந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதே தொகுதியைச் சேர்ந்தவரான நடிகர் மோகன்லால் ஆர்யாவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்கபொதுவெளியில் விவசாயத் தலைவர்களுடன் விவாதிக்க மத்திய அரசு தயாரா? - அரவிந்த் கெஜ்ரிவால் சவால்..

”ஆர்யாவின் பெற்றோர் நீண்ட காலமாக கட்சியில் இருக்கிறார்கள். அவரது அப்பா ஒரு எலக்ட்ரீசியன். அம்மா எல்.ஐ.சி முகவராக இருக்கிறார்” எனக் கூறுகிறார் சி.பி.எம்மைச் சேர்ந்த கட்சித் தொண்டர் ஒருவர்.

”சிறுவயதிலிருந்தே அப்பாவுடன் கைகோர்த்து கட்சி நிகழ்ச்சிகளுக்கு சென்றேன் என எல்லாரும் கூறுவார்கள். ஆனால் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது பாலசங்கத்தில் சேர்ந்தது முதலாக கட்சி நினைவுகள் ஞாபகமிருக்கிறது” என்று கூறுகிறார் ஆர்யா.

பால சங்கத்தில் துடிப்புடன் பணிபுரிந்து மாநில தலைவராகியிருக்கிறார். கல்லூரிக்குச் சென்றதும் மாணவர் அமைப்பில் சேர்ந்து பணிபுரிந்து, பின்பு மாநில உறுப்பினராகியிருக்கிறார். ”தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைப்பு அனுபவம் மிகவும் உதவியாக இருந்தது. மக்களிடம் கொள்கைகளை நன்றாக புரியவைக்க முடிந்தது” என்று கூறுகிறார் ஆர்யா.

மேலும் படிக்க'மது குடிக்கவேண்டாம், வீட்டுக்குள் இருங்கள்’ - வட இந்தியர்களை எச்சரிக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.. காரணம் என்ன?

செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான எந்த வித பதற்றமும் இல்லாமல், ”எனது தொகுதிக்கும், திருவனந்தபுரத்துக்கும் மிக முக்கியமாக செய்ய வேண்டிய பணியாக நினைப்பது கழிவு மேலாண்மை, கோவிட் காலத்தில் இது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. சுகாதார நிலையங்களில் இது மிக முக்கியமான அளவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்களை நோக்கிய திட்டங்கள் சீரிய வகையில் முன்னெடுக்கப்படும்” எனத் தடங்கலில்லாமல் பேசி முடித்திருக்கிறார்.

இளம் மேயருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறது கேரளம்.
Published by:Gunavathy
First published: