இந்தியாவின் முதல் இளம் மேயராக திருவனந்தபுரத்தில் பதவியேற்கும் 21 வயது கல்லூரி மாணவி

இந்தியாவின் முதல் இளம் மேயராக திருவனந்தபுரத்தில் பதவியேற்கும் 21 வயது கல்லூரி மாணவி

ஆர்யா ராஜேந்திரன்

கேரளாவில் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி கைப்பற்றியது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கேரள மாநிலம் திருவனத்தபுரத்தில் நாட்டிலேயே இளம் வயது மேயராக, 21 வயதே ஆன ஆர்யா ராஜேந்திரன் எனும் கல்லூரி மாணவி பொறுப்பேற்க உள்ளார்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், ஆளும் சிபிஎம் கட்சி சார்பில் முதவன்முகல் வார்டில் போட்டியி்ட்டு வென்றவர் ஆர்யா ராஜேந்திரன்.

    21 வயதே நிரம்பிய இவரை புதிய மேயராக நியமிக்க, சிபிஎம் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியில் கணிதத்துறையில் இளங்கலை இரண்டாமாண்டு படித்து வரும் ஆர்யா எஸ்எஃப்ஐ  மாநிலக்  குழுவின் உறுப்பினர். சிபிஎம் கேசவதேவ் சாலைக் கிளைக் குழுவின் உறுப்பினராகவும், பாலாஜனசங்கத்தின் மாநிலத் தலைவராகவும் இவர் உள்ளார், அரசியலில் தீவிரமாக செயல்பட்டு உள்ளார்.

    கேரளாவில் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி கைப்பற்றியதை தொடர்ந்து தற்போது ஆர்யா ராஜேந்திரனை மேயராக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: