டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு 3 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளதாக வேட்புமனு தாக்கலின் போது, வழங்கிய பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அரவிந்த் கெஜ்ரிவால், செவ்வாய்க்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தன்னிடம் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளதாக கூயுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு கெஜ்ரிவால் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தோடு ஒப்பிடுகையில், அவரது சொத்துமதிப்பு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது.
கெஜ்ரிவாலிடம் உள்ள ரொக்கம் மற்றும் நிதி முதலீடுகள் இரண்டேகால் லட்சம் ரூபாயில் இருந்து ஒன்பதரை லட்சமாக அதிகரித்துள்ளது. அவரது மனைவியிடம் உள்ள ரொக்கம் மற்றும் நிதி முதலீட்டின் மதிப்பு 15 லட்சத்திலிருந்து 57 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.