Home /News /national /

திரௌபதி முர்மு மீது மரியாதை உண்டு.. எனினும், எங்களின் ஆதரவு யஷ்வந்த் சின்ஹாவிற்கு தான்.. ஆம் ஆத்மி

திரௌபதி முர்மு மீது மரியாதை உண்டு.. எனினும், எங்களின் ஆதரவு யஷ்வந்த் சின்ஹாவிற்கு தான்.. ஆம் ஆத்மி

 எங்களின் ஆதரவு யஷ்வந்த் சின்ஹாவிற்கு தான்.. ஆம் ஆத்மி

எங்களின் ஆதரவு யஷ்வந்த் சின்ஹாவிற்கு தான்.. ஆம் ஆத்மி

குடியரசு தலைவர் தேர்தல் வரும் திங்கட்கிழமை நடைபெறும் எனவும், வியாழனன்று முடிவு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    குடியரசு தலைவர் தேர்தல் வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ள நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, எதிர்கட்சியின் பிரதிநிதியான யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    ஆம் ஆத்மி கட்சி, டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியில் உள்ளது. நாட்டில் பாஜக மற்றும் காங்கிரஸ் துணை அல்லாமல் இரு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஒரே கட்சி ஆம் ஆத்மி தான். இக்கட்சிக்கு 10 மாநிலங்களவை எம்.பிக்களும், பஞ்சாப், டெல்லி, கோவா என அனைத்தையும் சேர்த்து 156 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.

    ஆம் ஆத்மி கட்சி தொடக்க காலத்தில் பாஜாகவை எதிர்த்து பெரிதாக குரல் கொடுத்தாலும், சமீப காலங்களில் பாஜகவை பெரிதாக விமர்சிக்காமல் இருந்து வந்தது. பாஜகவுடன் மென்மை போக்கை கடைப்பிடித்து வந்தபோதிலும், மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும் நாட்டின் நிதிக் குற்ற தடுப்பு பிரிவினரால் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சென்ற மாதம் கைது செய்யப்பட்டார். இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்.

    மேலும் இந்தியாவின் பிற மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி வளர்வதற்கு எதிர்கட்சியினருடன் இருந்தால் மட்டுமே முடியும் என்று ஆம் ஆத்மி கணக்கு போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜகவிற்கு ஆதரவாக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், அந்த கட்சியின் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் பேசிய மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங், “நாங்கள் திரௌபதி முர்மூவை மதிக்கிறோம். எனினும், எங்களின் ஆதரவு யஷ்வந்த் சின்ஹாவிற்கு” தான் என கூறினார்.

    திரௌபதி முர்மூவிற்கு பாஜகவும், கூட்டணி கட்சிகளும், எதிர் கட்சிகளும் கூட ஆதரவளிப்பதால், அவர் எளிதில் வெற்றி பெற்று, இந்தியாவின் முதல் பழங்குடி பெண் குடியரசு தலைவராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குடியரசு தலைவர் தேர்தல் வரும் திங்கட்கிழமை நடைபெறும் எனவும், வியாழனன்று முடிவு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    - ராஜ்குமார்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Aam Aadmi Party, Arvind Kejriwal, Draupadi Murmu, Yashwanth Sinha

    அடுத்த செய்தி