டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல்!

திடீர் தாக்குதலால் அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி அடைந்தார்.

news18
Updated: May 4, 2019, 6:28 PM IST
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல்!
அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கிய நபர்
news18
Updated: May 4, 2019, 6:28 PM IST
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திறந்த வாகனத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென அவரை ஒரு இளைஞர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களவை தேர்தல் டெல்லியில் உள்ள 8 தொகுதிகளுக்கு வரும் 12-ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக, ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

இன்று மோதி நகரில் திறந்த வாகனத்தில் அவர் ஊர்வலமாக சென்றார். அப்போது, திடீரென ஒரு நபர் வாகனத்தின் மேலேறி அவரை பலமாக தாக்கினார்.இதனால், அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி அடைந்தார். கூடியிருந்த தொண்டர்கள் அந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், அரவிந்த் கெஜ்ரிவால் ஊர்வலம் போனபோது, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அவரை கண்ணத்தில் அறைந்தது பரபரப்பானது குறிப்பிடத்தக்கது.
First published: May 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...