Home /News /national /

குடும்பத்தினருடன் சென்று வாக்களித்த புகைப்படத்தை பகிரிந்த கெஜ்ரிவால்... ஆனால் அதிலும் சிக்கல்

குடும்பத்தினருடன் சென்று வாக்களித்த புகைப்படத்தை பகிரிந்த கெஜ்ரிவால்... ஆனால் அதிலும் சிக்கல்

குடும்பத்தினருடன் முதல்வர் கெஜ்ரிவால்

குடும்பத்தினருடன் முதல்வர் கெஜ்ரிவால்

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்த புகைப்படத்தை அரவிந்த் கெஜ்ரிவால் பகிர்ந்துளார். ஆனால் அதிலும் தற்போது ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. டெல்லியில் அதிக குளிர்காரணமாக 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு 8 மணிக்கு தொடங்கியது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் வாக்களித்து வருகின்றனர். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் வாக்களித்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். முதன்முறையாக வாக்களிக்கும் அவரது மகன் புல்கித்தும்  வருகை தந்திருந்தார்.

இந்த புகைப்படத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் எல்லாம் சரி, உங்க பொண்ணு எங்கே என்று கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர்.





அரவிந்த் கெஜ்ரிவால் பெண் ஹர்ஷிதா இவர்களுடன் வரவில்லை என்பது கேள்விகுறியாக இருந்தது. ஆனால் அவர் ஏன் வாக்களிக்க அரவிந்த் கெஜ்ரிவால் உடன் வருகை தரவில்லை என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
Published by:Vijay R
First published:

Tags: Arvind Kejriwal

அடுத்த செய்தி