டெல்லியில் 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மின்சார கட்டணம் இலவசம் - அரவிந்த் கெஜ்ரிவால்

"201 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 50% மானியம்"

news18
Updated: August 1, 2019, 2:11 PM IST
டெல்லியில் 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மின்சார கட்டணம் இலவசம் - அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்
news18
Updated: August 1, 2019, 2:11 PM IST
தலைநகர் டெல்லியில் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மின்சார கட்டணம் கிடையாது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. ஆட்சியை தக்க வைக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். சமீபத்தில் மெட்ரோ ரயில்களில் பெண்கள் கட்டணமில்லால் பயணிக்கலாம் என்று அவர் அறிவித்தார்.

இந்நிலையில், 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மின்சார கட்டணம் கிடையாது என்று இன்று அறிவித்துள்ளார். மேலும், 201 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 50% மானியம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.


பொதுமக்களுக்கு வழங்கப்படும் இந்த சலுகையால் டெல்லி அரசின் கஜானா காலியாகும் என்று எதிர்க்கட்சியான பாஜக விமர்சித்துள்ளது.

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...