மார்ச் 1-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம்! கெஜ்ரிவால் திடீர் அறிவிப்பு

அரவிந்த் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி வருகிறார்.

மார்ச் 1-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம்! கெஜ்ரிவால் திடீர் அறிவிப்பு
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
  • News18
  • Last Updated: February 24, 2019, 7:01 AM IST
  • Share this:
டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மார்ச் 1-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கிவரும் தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தலுக்குத் தயாராகிவருகின்றன. இந்தநிலையில், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி வருகிறார்.

இதுதொடர்பாக, பல பொதுக்கூட்டங்களில் பேசியுள்ள அவர் பிரதமர் மோடிக்கும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில், நேற்று டெல்லி சட்டசபையில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச் முதல் தேதியில் இருந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.


இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘டெல்லியில் உள்ள மக்கள் தங்களை ஆளும் அரசை வாக்களித்து தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கின்றனர். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை. நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஜனநாயகம் டெல்லிக்கு மட்டும் இல்லாமல் போனது ஏன்? எனவே, மார்ச் முதல் தேதியில் இருந்து டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் வரை மத்திய அரசுக்கு எதிரான எங்களது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.

Also see:

First published: February 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்