டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளிடம், ஆன்லைனில் பணமோசடி செய்யப்பட்டது. அந்த நபர் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா. இவர் ஓ.எல்.எக்ஸ்.-ல், பழைய சோபா ஒன்றை விற்பனை செய்வதற்காக, விளம்பரம் அளித்திருந்தார். ஹர்ஷிதாவிடம் சோபா வாங்க அணுகிய ஒருவர், அவரது வங்கி கணக்கில், பணம் செலுத்தி உள்ளார். பின் அவர் மொபைல் எண்ணுக்கு, 'கியூ ஆர் கோடு' லிங்கை அனுப்பி வைத்து, ரூ.34 ஆயிரம் பணத்தை சுருட்டி உள்ளார்.
இதனையடுத்து, டெல்லி சிவில் லைன் போலீசாரிடம் ஹர்ஷிதா புகார் அளித்துள்ளார். இது சைபர் மோசடி கும்பலின் கைவரிசையாக இருக்கும் என தெரிவித்துள்ள போலீசார், எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சைபர் மோசடி கும்பல், டெல்லி முதல்வரின் மகளிடமே கைவரிசையை காட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த ஆசாமி தேடப்பட்டு வருகிறார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.