’தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த பாஜக எம்எல்ஏக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.
காஷ்மீரில் 1990-களில் நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை விவேக் ரஞ்சன் அக்னிகொத்ரி இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு உத்தரப்பிரதேசம், திரிபுரா, கோவா, ஹரியானா, குஜராத் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மேகதாது அணை விவகாரம்: தமிழகத்தை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்
இந்த நிலையில் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு டெல்லியிலும் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்தனர்.
BJP wants #TheKashmirFiles to be tax free.
Why not ask @vivekagnihotri to upload the whole movie on YouTube for FREE?
-CM @ArvindKejriwal pic.twitter.com/gXsxLmIZ09
— AAP (@AamAadmiParty) March 24, 2022
இதற்கு பதில் அளித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில் " ஏன் எங்களிடம் வரிவிலக்கு கேட்கிறீர்கள்? அதை வரிவிலக்கு அளிக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது? அவ்வளவு ஆர்வமாக இருந்தால் விவேக் அக்னிஹோத்ரியை ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை யூடியூப்பில் போடச் சொல்லுங்கள். அனைவரும் இலவசமாக பார்க்க முடியும் என்று அவர் கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் பதிலால் அவையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் மேஜையை தட்டி, கரகோஷம் எழுப்பினர்.
இதையடுத்து, பாஜக தலைவர் பி.எல்.சந்தோஷ், ’நில் பட்டே சனட்ட’ மற்றும் ’சாண்ட் கி ஆன்க்’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வரிவலிக்கு அறிவித்து மக்கள் அந்த படங்களை பார்க்கும் படி, முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தியதை சுட்டிகாட்டினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arvind Kejriwal, BJP