டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் ஜூன் 15-ம் தேதி பஞ்சாபின் ஜலந்தரில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு , சொகுசு வால்வோ பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர்.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் மல்விந்தர் சிங் காங் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘மது, மணல் மாஃபியாக்கள் மற்றும் போதை மருந்துகளை ஒழிக்க ஆம் ஆத்மி அரசு ஏற்கனவே பல முன்னெடுப்புகளைச் செய்துள்ளது. போக்குவரத்து மாஃபியா பிரச்சனையை சரி செய்ய அரசு பேருந்து வசதி செய்ய உள்ளோம்’ என்று காங் கூறினார்.
பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்களை வரலாற்று ஆசிரியர்கள் புறக்கணித்தது ஏன்? அமித் ஷா
இந்த முன்னெடுப்பின் கீழ் சண்டிகர், ரூப்நகர், ஜலந்தர், ஹோஷியார்பூர், லூதியானா, அமிர்தசரஸ், பதன்கோட், மோகா, முக்த்சர் மற்றும் ஷஹீத் பகத் சிங் நகர் ஆகிய 10 நகரங்களில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு பேருந்து சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமான நிலையம் செல்லும் வழித்தடங்களில் தனியார் நிறுவனங்கள் மட்டும் ஏன் பேருந்துகளை இயக்கி வருகிறது? அரசு பேருந்துகள் ஏன் ஓடவில்லை என்று வெளிநாட்டில் இருந்து பஞ்சாப் வந்த ஏராளமான NRIகள் தன்னிடம் புகார் அளித்ததாக டெல்லி முதல்வர் கூறினார். அதைத் தீர்க்கும் முயற்சியாகவும் இது அமையும் என்று பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார்.
காற்று மாசால் ஜனவரி முதல் தலைநகரில் நிலக்கரிக்குத் தடை!
தனியாருக்கு பயணிகள் செலுத்த வேண்டிய தொகையில் பாதிக்கும் குறைவான கட்டணத்தை இந்த அரசு பேருந்துகள் வசூலிக்கும். ஆனால், அவற்றை விட இரட்டிப்பு வசதிகளை வழங்கும் என்று கூறப்படுகிறது.
தனியார் பேருந்து நிறுவனங்கள் மட்டுமே அந்த வழித்தடங்களில் ஓடுவதால் அவர்கள் வைக்கும் கட்டணமே இறுதியானது என்ற நிலை உள்ளது. இதனால் தனியார் நிறுவனங்கள் அதிகக் கட்டணங்களை வசூலித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைக் கட்டுக்குள் கொண்டு வர இந்த வழித்தடங்களில் அரசு நுழைந்தால் தான் சாத்தியமாக்கும். அதனாலேயே இப்போது டெல்லி அரசு மற்ற மாநில அரசுக்குளோடு சேர்ந்து இந்த முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது.
பஞ்சாப் ரோடுவேஸ் மற்றும் PUNBUS இணையதளங்களில் இருந்து இந்த பேருந்துகளின் டிக்கட்டுகளை எளிதாக முன்பதிவு செய்ய முடியும் என்றார். மேலும் பேருந்தின் புறப்பாட்டு நேரமும், சேரும் நேரமும் இணையதளத்தில் பதிவிடப்படும் என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.