பல்கலைக்கழகங்களில் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் - மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை

பல்கலைக்கழகங்களில் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் - மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
  • Share this:
மத்திய அரசுப் பல்கலைக்கழகங்களில் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் கல்வி நிறுவனங்கள் முழுவதும் திறக்கப்பட முடியாத நிலையில் உள்ளது. மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் தேர்வுகள் எதுவும் நடத்தப்பட முடியாத சூழல் உள்ளது. தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். ஆனால், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை. தேர்வுகள் நடத்தப்படுவதில் குழப்பம் நீடித்துவருகிறது.

இந்தநிலையில், டெல்லி மாநில பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு மாணவர்கள் உள்பட அனைவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. அவர்களுக்கு பல்கலைக்கழகங்களால் முடிவு செய்யப்படும் வரைமுறைப்படி தேர்ச்சி வழங்கப்படும் என்று டெல்லி மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்தார்.இந்தநிலையில், தேர்வுகள் ரத்து செய்யப்படுவது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டர் பதிவில், ‘பிரதமர் மோடி தலையிட்டு டெல்லி பல்கலைக்கழகம் உள்பட மத்திய அரசுப் பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களின் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
First published: July 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading