அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியாவின் பிரதமராக ஆவார் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இங்கு மொத்தம் உள்ள 117 இடங்கள் உள்ள நிலையில் 59 இடங்களில் பெரும்பான்மை பெரும் கட்சி அல்லது கூட்டணி, ஆட்சியை பிடிக்கும்.
தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில், 90 இடங்களில் முன்னணி வகிக்கிறது. கடந்த தேர்தலின்போது அக்கட்சி 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
பஞ்சாபை பொருத்தளவில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதுதொடர்பாக ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகவ் சாதா கூறியதாவது-
ஆம் ஆத்மி தேசிய கட்சியாக மாறி வருகிறது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஆம் ஆத்மி அமையும். இன்றைக்கு ஆம் ஆத்மி இந்தியா முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்த தொடகியுள்ளது.
ஆம் ஆத்மியை டெல்லி கட்சி என்று யாரும் கூற முடியாது. 2012-ல் தான் ஆம் ஆத்மி கட்சி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 2022-ல் நாங்கள் 2 மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ளோம். பாஜகவுடன் ஒப்பிடும்போது நாங்கள் விரைவாகவே ஆட்சியை கைப்பற்றி உள்ளோம். அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியாவின் பிரதமராக ஆவார்.
கெஜ்ரிவாலின் நிர்வாக முறை மீது பஞ்சாப் மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகளாக பஞ்சாபை ஆட்சி செய்தவர்களை மக்களை பயன்படுத்திக் கொண்டனர். அவர்களுக்கு நல்ல பாடத்தை மக்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள். கெஜ்ரிவாலுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கூறி நாங்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டோம். இதற்கு வெற்றி கிடைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்திற்கென்று பெருமை, புகழ் உள்ளது. அதை ஆம் ஆத்மி மீட்டெடுத்து, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும். இதற்கான நல்ல பல திட்டங்களை வைத்துள்ளோம். பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் வெற்றி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arvind Kejriwal, Election 2022