டெல்லி அரசு வெளியிட்ட சர்ச்சை விளம்பரம்: திரும்பப் பெற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்..!

டெல்லி மாநில துணை நிலை கவர்னர் அனில்பைஜால் சிவில் பாதுகாப்பு இயக்குனரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார் என ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

டெல்லி அரசு வெளியிட்ட சர்ச்சை விளம்பரம்: திரும்பப் பெற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்..!
டெல்லி அரசின் விளம்பரம்
  • Share this:
டெல்லி அரசு சார்பாக சிவில் பாதுகாப்பு படையினருக்கான தன்னார்வலர்களை சேர்ப்பதற்காக அறிவிப்பு ஒன்றை செய்தி தாள்களில் வெளியிடப்பட்டிருந்தது. அதில் நேபாளம், பூடான் போன்ற தனி நாடுகளைப் போல இந்தியாவை சேர்ந்த சிக்கிம் மாநிலத்தையும் தனி நாடு என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

சிக்கிம் மாநில தலைமை செயலாளர், சிக்கிம் மாநிலம் 1975-ஆம் ஆண்டு மே மாதம் 16 ம் தேதி 22 வது மாநிலமாக மாறியது. அன்றில் இருந்து நமது பெரிய நாட்டின் குடிமக்கள் என்பதில் பெருமை கொள்ளும் மக்களுக்கு இந்த விளம்பரம் வேதனையளிக்கிறது. இந்த விளம்பரத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் சிக்கிம் மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் வேறு ஒரு விளம்பரத்தை வெளியிட வேண்டும் என குறிப்பிட்டார். 

முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், சிக்கிம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் இது போன்ற பிழைகள் பொறுத்து கொள்ள முடியாது. விளம்பரம் திரும்ப பெறப்பட்டு உள்ளது. தொடர்புடைய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. டெல்லி மாநில துணை நிலை கவர்னர் அனில்பைஜால் சிவில் பாதுகாப்பு இயக்குனரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார் என ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
First published: May 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading