ஆளுநருக்கு எதிராக 3-வது நாளாக கெஜ்ரிவால் தர்ணா

news18
Updated: June 13, 2018, 9:56 PM IST
ஆளுநருக்கு எதிராக 3-வது நாளாக கெஜ்ரிவால் தர்ணா
news18
Updated: June 13, 2018, 9:56 PM IST
டெல்லி துணைநிலை ஆளுநர் வீட்டில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.

டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியும், வீடுகள்தோறும் ரேசன் பொருட்களை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்க வலியுறுத்தியும் திங்கள்கிழமை இரவு முதல், துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் இல்லத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மனீஷ் சிசோடியா மற்றும் அமைச்சர்கள் சத்யேந்திர் ஜெயின், கோபால் ராய் ஆகியோர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் சிசோடியாவும், சத்யேந்திர ஜெயினும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் வீட்டிலிருந்து ஆம் ஆத்மி தொண்டர்கள் துணைநிலை ஆளுநர் இல்லம் நோக்கி பேரணியாக சென்றனர்.

இந்த பேரணியில், பாஜகவிலிருந்து அண்மையில் ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் யஸ்வந்த சின்ஹாவும் கலந்து கொண்டார்.
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...