விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து உயிரை மாய்த்துக்கொண்ட சீக்கிய மதகுருவின் குடும்பத்தினருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல்..

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து உயிரை மாய்த்துக்கொண்ட சீக்கிய மதகுருவின் குடும்பத்தினருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல்..

கெஜ்ரிவால்

மூன்று கருப்பு சட்டங்களும் திரும்பப் பெறப்படவேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.

  • Share this:
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்த் பாபா ராம் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “சந்த் பாபா ராம் சிங் ஜியின் தற்கொலை பற்றிய செய்தி வேதனையானது. இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் விவசாயிகள் தங்கள் உரிமைகளை கேட்கிறார்கள். விவசாயிகளின் குரலை அரசாங்கம் கேட்க வேண்டும், மூன்று கருப்பு சட்டங்களும் திரும்பப் பெறப்படவேண்டும் ”என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.

நேற்று மாலை, டிசம்பர் 17-ஆம் தேதி, 65 வயதான சீக்கிய மதகுருவான பாபா ராம் சிங், சிங்கு பகுதி எல்லையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் கர்னல் மாவட்டத்தின் நிசிங் பகுதியில் உள்ள சிங்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் சந்த் பாபா ராம் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக விட்டுச்சென்ற குறிப்பில் “விவசாயிகளின் வலியை” தாங்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“விவசாயிகள் வேதனையில் உள்ளனர். அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக சாலைகளில் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர், இது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. அரசாங்கம் நீதி வழங்கவில்லை, இது மிக கொடுமை. துன்புறுத்தலை சகித்துக்கொள்வது பாவம், ஒடுக்குவது ஒரு பாவம். சிலர் விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் கொடுமைக்கு எதிராகவும் நிற்கின்றனர். சிலர் விருதுகளை திருப்பி அனுப்பியுள்ளனர். அரசின் கொடுமைக்கு எதிராக நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இது கொடுமைக்கு எதிரான குரல் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவான குரல் ”என்று அந்த தற்கொலை குறிப்பில் எழுதியுள்ளதாக பிடிஐ செய்தி தெரிவித்துள்ளது.
Published by:Gunavathy
First published: