10 % இடஒதுக்கீடு ஆபத்தானது! ஜிக்னேஷ்க்கு ஆதரவாக குரல் எழுப்பும் கெஜ்ரிவால்

மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இதனை வரவேற்றார்.

Web Desk | news18
Updated: January 10, 2019, 10:39 AM IST
10 % இடஒதுக்கீடு ஆபத்தானது! ஜிக்னேஷ்க்கு ஆதரவாக குரல் எழுப்பும் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்
Web Desk | news18
Updated: January 10, 2019, 10:39 AM IST
பொருளாதார அடிப்படையில் 10 % இட ஒதுக்கீடு வழங்குவது மிகவும் ஆபத்தானது என்ற ஜிக்னேஷ் மேவானியின் கருத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார்.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்சாதியைச் சேர்ந்தவர்களுக்கு 10 % இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஏற்கெனவே, இந்திய அளவில் 49.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு முறை இருந்துவருகிறது. 50 % சதவிகிதத்துக்கு அதிகமாக இடஒதுக்கீடு இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த செவ்வாய் கிழமை, பொருளாதா ரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு, அரசு வேலை மற்றும் அரசு கல்வியிநிறுவனங்களில் 10 % இட ஒதுக்கிடு வழங்கப்படும் என்று அறிவித்தது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றன. மேலும், 10 % இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேறியது. முதலில், மத்திய அரசின் இந்த முடிவை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் வரவேற்றார்.

இந்தநிலையில், “நான் பல பேருடன் பேசினேன். இந்தத் திட்டத்தின் மூலம் சாதிவாரி ஒதுக்கீட்டை அழிக்கும் முயற்சியில் பா.ஜ.க உள்ளது. இது மிகவும் ஆபத்தானது” என்ற ஜிக்னேஷ் மேவானியின் ட்வீட்டை ரீ ட்விட் செய்துள்ளார். அதில், “ஜிக்னேஷ் மேவானியின் கருத்துடன் ஒத்துப் போகிறேன்” என்றார்.Also see:
First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...