டெல்லி முதல்வராக பிப்ரவரி 16-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பார் என்று அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி அசுர வெற்றி பெற்றது. அதனையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாது முறையாக முதல்வராவது உறுதியானது.
இந்தநிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ‘கட்சிக் கூட்டத்தின்போது, அரவிந்த் கெஜ்ரிவாலை ஆம் ஆத்மி சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளோம். அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து மொத்த அமைச்சரவையும் பிப்ரவரி 16-ம் தேதி ராமிலா மெய்டன் மைதானத்தில்வைத்து பதவியேற்கவுள்ளோம்’ என்று தெரிவித்தார்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.