அருணாச்சல பிரதேசம் கொரோனா இல்லாத மாநிலமானது எப்படி?

அருணாச்சல பிரதேசம் கொரோனா இல்லாத மாநிலமானது எப்படி?

கொரோனா

மாநில சுகாதாரத்துறையின் கண்காணிப்பு அதிகாரியான லோப்சாங் ஜம்பா கூறுகையில், கடந்த 2 நாட்களாக மாநிலத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதியாகவில்லை. அதே நேரத்தில் இதுவரை 56 பேர் கொரோனாவினால் உயிரிழந்திருக்கின்றனர்.

  • Share this:
அருணாச்சல பிரதேச மாநிலம் இன்றோடு கொரோனா தொற்று இல்லா மாநிலமாகி உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த கடைசி 3 பேரும் இன்று குணமடைந்து வீடு திரும்பியதால் அந்த மாநிலம் கொரோனா இல்லா மாநிலம் ஆகியுள்ளது. அங்கு இதுவரை 16,836 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 16,780 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில சுகாதாரத்துறையின் கண்காணிப்பு அதிகாரியான லோப்சாங் ஜம்பா கூறுகையில், கடந்த 2 நாட்களாக மாநிலத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதியாகவில்லை. அதே நேரத்தில் இதுவரை 56 பேர் கொரோனாவினால் உயிரிழந்திருக்கின்றனர். அருணாச்சல் பிரதேசத்தின் மீட்சி விகிதம் 99.66% ஆகவும், பாஸிட்டிவிட்டி ரேட் பூஜ்ஜியம் சதவீதமாகவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதுவரை ஒட்டுமொத்தமாக 4,05,647 மாதிரிக பரிசோதிக்கப்பட்டுள்ளன, இதில் நேற்று (சனிக்கிழமை) மட்டும் 312 பரிசோதனைகள் நடத்தப்பட்டிருப்பதாகவும் லோப்சாங் ஜம்பா தெரிவித்தார்.

மாநில நோய்த்தடுப்பு அதிகாரி திமோங் படுங் கூறுகையில் இதுவரை மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 32,325 முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் சுகாதாரத் துறை வாரத்தில் நான்கு நாட்கள் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே மகாராஷ்டிரா தவிர்த்து தமிழகம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகளவாக மகாராஷ்டிராவில் 8,623 பேரும், கேரளாவில் 3,792 பாதிப்புகளும் பதிவாகி உள்ளது. அதே நேரத்தில் தெலங்கானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தினசரி அளவில் அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேற்கண்ட மாநில சுகாதாரத்துறையினருடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டி பேசிய கேபினட் செயலர், கடந்த ஆண்டு வெளிப்படுத்திய கூட்டு உழைப்பை வீணாக்காமல் கொரோனா பரவலை தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Published by:Arun
First published: