ஹோம் /நியூஸ் /இந்தியா /

அருணாசலப் பிரதேசத்தில் பயங்கரம் - எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் சுட்டுக்கொலை

அருணாசலப் பிரதேசத்தில் பயங்கரம் - எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் சுட்டுக்கொலை

திராங் அபோ

திராங் அபோ

திராங் அபோவும் அவரின் மகனும் உயிரிழந்தனர். திராங் அபோவின் மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

அருணாசலப் பிரதேச மாநிலத்தில் NCSN தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் எம்.எல்,ஏ., உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

அருணாச்சலப் பிரதேச மாநிலம், திரப் மாவட்டம், போகாபனி என்ற இடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஆளும் கூட்டணி கட்சியின் எம்.எல்.ஏ,வும், என்.பி.பி.வேட்பாளருமான திராங் அபோ உள்ளிட்ட 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அசாமின் திப்ருகரில் இருந்து அருணாசலப்பிரதேசத்துக்கு திராங் அபோ தனது மகன், மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது என்.சி.எஸ். என். தீவிரவாதிகள் இவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் திராங் அபோவும் அவரின் மகனும் உயிரிழந்தனர். திராங் அபோவின் மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் இரண்டு போலீசாரும் உயிரிழந்துள்ளனர்.

மறைந்த திராங் அபோவுக்கு வயது 56. இவர் அருணாசலப் பிரதேச மாநிலம் கேன்சா மேற்கு தொகுதியில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக தேர்வானார். மேகாலயா முதலமைச்சர் கொன்ராட் சங்கமா இந்த தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அத்துதுடன், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும், தாக்குதல் நடத்தியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

Also see...ள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், 5 வயது குழந்தை கொடூரக் கொலை


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Arunachal Pradesh, Attacked, Dead