மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் அருண் ஜேட்லி

news18
Updated: April 16, 2018, 9:58 AM IST
மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் அருண் ஜேட்லி
மாநிலங்களவை எம்.பி.,யாக பதவியேற்கும் அருண் ஜேட்லி
news18
Updated: April 16, 2018, 9:58 AM ISTசிகிச்சை முடிந்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி  மாநிலங்களவை எம்பியாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு  குடியரசு துணை தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான  வெங்கய்ய நாயுடு  பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

6 மாநிலங்களில் காலியாக இருந்த 58 எம்பிக்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 23ம் தேதி நடைபெற்றது. அந்த மாநிலங்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் இருந்து  அருண் ஜேட்லி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மற்ற எம்.பி.,க்கள் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டனர். சிறுநீரக பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வந்த அருண் ஜேட்லிக்கு கிருமித் தொற்று ஏற்படும் என்பதால்  மற்ற எம்.பி.,க்களுடன் சேர்ந்து ஜேட்லி பதவியேற்கவில்லை. அவர் தனது வீட்டிலிருந்தபடியே அலுவலக பணிகளை மேற்கொண்டு வந்தார்.


Loading...இந்நிலையில் நேற்று அவர் எம்பியாக பதவியேற்றுக் கொண்டார். அந்த கூட்டத்தில்  பாஜக மூத்த தலைவர்கள், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜகவின் பரிந்துரை கடிதத்தின்படி அந்த கட்சியின் மாநிலங்களவைத் தலைவராகவும் ஜேட்லி பொறுப்பேற்றுக் கொண்டார்.


First published: April 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்