கல்லூரிக் காலத்திலேயே அரசியலில் ஆர்வம்... நெருக்கடி நிலையின்போது 19 மாதங்கள் சிறை...

Arun Jaitley | 2019 தேர்தலில் பாஜக மீண்டும் வென்றபின், தன் உடல்நிலையை காரணம் காட்டி தான் மீண்டும் அமைச்சராக விரும்பவில்லை என தெரிவித்தார்.

கல்லூரிக் காலத்திலேயே அரசியலில் ஆர்வம்... நெருக்கடி நிலையின்போது 19 மாதங்கள் சிறை...
அருண் ஜெட்லி
  • News18
  • Last Updated: August 24, 2019, 1:18 PM IST
  • Share this:
கல்லூரி காலத்திலேயே அரசியலில் கால் பதித்து பாதுகாப்பு, நிதி என பல்வேறு முக்கிய இலாகாக்களின் மத்திய அமைச்சராக கோலோச்சியோவர் பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி. 

1952-ம் ஆண்டில் பிறந்த டெல்லிவாசியான அருண் ஜேட்லி, 1973-ம் ஆண்டில் சட்டம் பயின்றார். கல்லூரி பருவத்திலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பின் அங்கமான அகில பாரதிய வித்யா பரிஷத்தில் சேர்ந்து, மாணவர் சங்கத் தலைவராக இருந்தவர்.

ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் ராஜ்நாராயணன் தொடங்கிய ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். அவசர நிலை பிரகடனத்தின்போது 19 மாதங்கள் சிறைவாசத்தை அனுபவித்தவர்.


சிறைவாசம் முடிந்ததும் பாஜக-வின் முன்னோடியான ஜனசங்கத்தில் சேர்ந்தார். பாஜக தொடங்கப்பட்டதும் இளைஞர் அணியின் தலைவராக உயர்ந்தார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த அருண் ஜேட்லி, வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்

சரத் யாதவ் முதல் மாதவ்ராவ் சிந்தியா வரை கட்சி பேதமின்றி அனைவருக்காகவும் வழக்குகளில் ஆஜரானவர் ஜேட்லி. 1991-ல் பாஜக தேசிய செயற்குழுவின் உறுப்பினராக இருந்தவர்1999ல் பாஜக ஆட்சி அமைந்தபோது தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராகவும், சட்டத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். கப்பல் அமைச்சகத்தின் பொறுப்பையும் வகித்த ஜேட்லி, பாஜக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்

பின்னர் மீண்டும் அமைச்சரான அவர், தேர்தலில் பாஜக தோற்றபிறகு மீண்டும் பொதுச் செயலாளர் ஆனார். பின்னர் மாநிலங்களவை உறுப்பினரான அவர், எதிர்க்கட்சித் தலைவரானார்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, ஜன்லோக்பால் மசோதா போன்றவற்றின் மீது சிறப்பாக உரையாற்றியவர். 2014ல் முதல் முறையாக அமிர்தசரஸ் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்ட ஜேட்லி தோல்வியடைந்தார்.

மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர், மோடியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், பின்னர் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

பணமதிப்பு நீக்கத்தின்போது மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் அருண் ஜேட்லி. 2019 தேர்தலில் பாஜக மீண்டும் வென்றபின், தன் உடல்நிலையை காரணம் காட்டி தான் மீண்டும் அமைச்சராக விரும்பவில்லை என தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அருண் ஜேட்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை மாலை சேர்க்கப்பட்டார்.

First published: August 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading