பொருளாதாரத்தை பணமதிப்பிழப்பு முறைப்படுத்தியது - அருண் ஜெட்லி

Demonetisation |பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட இன்றைய நாளை எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றன

Web Desk | news18
Updated: November 8, 2018, 10:08 PM IST
பொருளாதாரத்தை பணமதிப்பிழப்பு முறைப்படுத்தியது - அருண் ஜெட்லி
அருண் ஜெட்லி
Web Desk | news18
Updated: November 8, 2018, 10:08 PM IST
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பாதிப்புகளிலிருந்து நாடு இன்னும் மீண்டு வரவில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ள நிலையில், கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதில் இந்த நடவடிக்கை முக்கிய பங்காற்றியதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கமளித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இந்த நாளை எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றது.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரத்துக்கும், சமூகத்துக்கும் ஏற்பட்ட பாதிப்புகளை ஒவ்வொருவரும் தற்போது உணர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வயது, மதம், தொழில் என எந்த பாகுபாடும் இன்றி, ஒவ்வொரு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டதோடு, பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பாதிப்புகள் இன்னும் தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இன்னும் மீண்டுவரவில்லை. இதன் காரணமாக, இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்


பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் முழுமையான பாதிப்புகளை இன்னும் நாம் உணரவில்லை என்றும் மன்மோகன் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
எனவே, பொருளாதார கொள்கைகளில் நிலைத்தன்மையை மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொருளாதார கொள்கைகளை வகுக்கும்போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளதாகவும் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தனிப்பட்ட மனிதரால் ஏற்பட்ட பேரிடர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  “சேமிப்புப்பணம் திடீரென செல்லாது என அறிவிக்கப்பட்டதால் பலர் நடுத்தெருவுக்கு வந்ததாகவும், லட்சக்கணக்கான இந்தியர்கள் வங்கி வாசலில் நின்றதுடன், பலர் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பலர் வேலையிழந்ததுடன், சிறு தொழில்கள் நலிவடைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.பணமதிப்புநீக்க நடவடிக்கையின் போது, ஒட்டுமொத்த ரொக்கப் பணமும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டதாக பலரும் குறைகூறுவதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கமல்ல என்றும், கருப்புப் பணத்தை ஒழித்து முறையான பொருளாதாரத்தையும், வரி செலுத்த வேண்டியவர்களை செலுத்த வைப்பதுமே நோக்கம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ரொக்க பரிமாற்றத்திலிருந்து டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாற்ற பொருளாதார அமைப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும், இதன்மூலம், அதிக வரி வருவாய்க்கு வழி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்மூலம், சந்தேகத்துக்கு இடமாக பரிமாற்றம் செய்துள்ள 17 லட்சத்து 42 ஆயிரம் பேரின் வங்கிக்கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

2014-ம் ஆண்டில் இந்த அரசு பதவியேற்றபோது, 3 கோடியே 80 லட்சம் பேர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்த நிலையில், 4 ஆண்டுகளில் 6 கோடியே 86 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும், 5 ஆண்டுகள் முடிவில் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முறையான பொருளாதாரத்துக்கு மாறும்போது, நமது குடிமக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க முடியும் என்றும் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

Also See..

First published: November 8, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்