காங். ஆட்சியிலேயே கணினிகளை கண்காணிக்க விதிகள் உருவாக்கப்பட்டன: அருண் ஜெட்லி

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான், கணினிகளை மத்திய அரசு கண்காணிப்பதற்கான விதிகள் உருவாக்கப்பட்டதாகவும், அதற்கு மத்திய அரசு தற்போது அனுமதி மட்டுமே வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் அருண் ஜெட்லி தெளிவுபடுத்தினார்.

காங். ஆட்சியிலேயே கணினிகளை கண்காணிக்க விதிகள் உருவாக்கப்பட்டன: அருண் ஜெட்லி
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி
  • News18
  • Last Updated: December 22, 2018, 12:31 PM IST
  • Share this:
2009-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான், கணினிகளை புலனாய்வு அமைப்புகள் கண்காணிப்பதற்கான விதிகள் உருவாக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கமளித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும், புலனாய்வு அமைப்புகள் கண்காணிப்பதற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதற்கு நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கடும் அமளி ஏற்பட்டது.

மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் அருன் ஜெட்லி, சிறிய விவகாரத்தை எதிர்க்கட்சிகள் மலை போல் பெரிதாக்குவதாக விமர்சித்தார்.


2009-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான், கணினிகளை மத்திய அரசு கண்காணிப்பதற்கான விதிகள் உருவாக்கப்பட்டதாகவும், அதற்கு மத்திய அரசு தற்போது அனுமதி மட்டுமே வழங்கியுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

Also read... "பிரதமர் மோடி தன்னம்பிக்கையற்ற சர்வாதிகாரி" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

Also see...
First published: December 22, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading