நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றார் அருண் ஜெட்லி

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க இன்று நடந்த பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழுக் கூட்டத்திலும் அருண் ஜெட்லி கலந்துகொண்டார்.

நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றார் அருண் ஜெட்லி
அருண் ஜெட்லி
  • News18
  • Last Updated: February 15, 2019, 11:17 AM IST
  • Share this:
அமெரிக்காவில் சிகிச்சையை முடித்துவிட்டு திரும்பியுள்ள அருண் ஜெட்லி, நிதியமைச்சக பொறுப்பை இன்று ஏற்றுக் கொண்டார்.

மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அருண் ஜெட்லிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதன் காரணமாக, நிதியமைச்சக பொறுப்பு, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்த நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பியூஷ் கோயல் கடந்த ஒன்றாம் தேதி தாக்கல் செய்தார்.


எனினும், அமெரிக்காவிலிருந்தபடியே பட்ஜெட் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அருண் ஜெட்லி நேர்காணல் அளித்தார். மேலும், சமூக வலைதளங்களில் கருத்துக்களை பரிமாறி வந்தார்.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சை முடிந்து அருண் ஜெட்லி 2 தினங்களுக்கு முன்பு டெல்லி திரும்பினார். இதையடுத்து, நிதியமைச்சக பொறுப்பை இன்று காலை ஏற்றுக் கொண்டார்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க இன்று நடந்த பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழுக் கூட்டத்திலும் அருண் ஜெட்லி கலந்துகொண்டார்.Also see... தமிழகத்தில் மோடி மந்திரம் எடுபடுமா?
First published: February 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading