முகப்பு /செய்தி /இந்தியா / பிளாஸ்டிக் கழிவுகளால் அழியும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்.! கலைப்படைப்பு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷுவல் ஆர்ட்டிஸ்ட்

பிளாஸ்டிக் கழிவுகளால் அழியும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்.! கலைப்படைப்பு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷுவல் ஆர்ட்டிஸ்ட்

 அழியும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்

அழியும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்

மன்வீர் இதுவரை சுமார் 350 கிலோகிராம் பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்து பல்வேறு வடிவ கலை பொருட்களை உருவாக்கியுள்ளார். பூரி கடற்கரை மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாக இருப்பதால், மன்வீர் தனது கலைப்படைப்பு மூலம் அங்குள்ள மக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

டெல்லியை சேர்ந்த விஷுவல் ஆர்ட்டிஸ்ட் ஒருவர், ஒரிசாவில் உள்ள பூரி கடற்கரையில் 15 அடி நீளமுள்ள பிளாஸ்டிக் ஆலிவ் ரிட்லி கடல் ஆமை ஒன்றை நிறுவி இருக்கிறார். சுற்றுச்சூழலுக்கு குறிப்பாக கடல் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகளை மக்களுக்கு உணர்த்தும் நோக்கில், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட 15 அடி நீளமுள்ள இந்த ஆலிவ் ரிட்லி கடல் ஆமை கலைப்படைப்பை பூரி கடற்கரையில் நிறுவி இருக்கிறார் டெல்லியை சேர்ந்த விஷுவல் ஆர்ட்டிஸ்ட்டான மன்வீர் சிங். மன்வீர் 'பிளாஸ்டிக்வாலா' என்றும் அழைக்கப்படுகிறார்.

இவர் Utsha அறக்கட்டளை மற்றும் AFD ஆகியவற்றுக்கு இடையேயான "METIS Initiative on Plastics and Indo-Pacific Ocean 2021" இன் வெற்றியாளர் ஆவார். From Plastic to Art என்ற இவரது ப்ராஜக்ட் கடந்த செப்டம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தான் இந்த கலைப்படைப்பை உருவாக்கி இருக்கிறார். இந்த கலைப்படைப்பை உருவாக்குவதற்கு தேவையான பிளாஸ்டிக்கை புவனேஸ்வர் நகரம் முழுவதும் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த தனது habit changer பாக்ஸ்கள் மூலம் சேகரித்தி இருக்கிறார் மன்வீர் சிங்.

தவிர பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக பொதுமக்களுடன் உரையாடி, புவனேஸ்வர் நகரின் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலரங்குகளையும் நடத்தினார். தனது கலை படைப்புக்கு உலகின் மிகச்சிறிய கடல் ஆமைகளில் ஒன்றான ஆலிவ் ரிட்லியை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்தும் மன்வீர் சிங் கூறி இருக்கிறார். ஆலிவ் ரிட்லி உட்பட பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் பிளாஸ்டிக்கால் பாதிக்கப்படுகின்றன. ஒடிசாவில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் பெருமளவில் கூடு கட்டுவது பொதுவாக இருந்தாலும், மிக குறைவான ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளே உயிர்வாழ்கின்றன.

ALSO READ |  அனைத்து முன்னணி ஆடியோ தளங்களில் பிரதமர் மோடியின் 'மன் கி பாத்' நிகழ்ச்சி பதிவேற்றம்

ஜெல்லிமீன் என்று தவறாக நினைத்து பிளாஸ்டிக்கை அவை அடிக்கடி சாப்பிட்டு விடுகின்றன. பூமியின் வாழ்க்கை சுழற்சியை பராமரிப்பதில் ஆலிவ் ரிட்லிகள் பெரும் பங்கு வகிப்பதால் அவை பிளாஸ்டிக் கழிவுகளால் எதிர்கொள்ளும் நெருக்கடி மற்றும் அழிவை மக்கள் முன் கொண்டு வர விரும்பினேன் என்றார். 15 அடி நீளமுள்ள பிளாஸ்டிக் ஆலிவ் ரிட்லி கடல் ஆமையை உருவாக்க நாம் அன்றாடம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 15 அடி நீள கலைப்படைப்பை சுமார் 250 பிளாஸ்டிக் ஆமைகள் ஒன்றிணைந்து உருவாக்குவதாக மன்வீர் கூறி இருக்கிறார்.

ALSO READ |  மாஸ்க் போடுங்க... கொரோனா இன்னும் ஓயவில்லை : பிரதமர் மோடி எச்சரிக்கை

மன்வீர் இதுவரை சுமார் 350 கிலோகிராம் பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்து பல்வேறு வடிவ கலை பொருட்களை உருவாக்கியுள்ளார். பூரி கடற்கரை மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாக இருப்பதால், மன்வீர் தனது கலைப்படைப்பு மூலம் அங்குள்ள மக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டுள்ளார்.

இதனிடையே அழிந்து வரும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளை பாதுகாக்க வங்காள விரிகுடாவில் மீன்பிடி தடைப் பகுதிகள் குறித்து மீனவர்களை எச்சரிக்கும் மொபைல் ஆப்-ஐ ஒடிசா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

First published: