பிரபல தொழிலதிபரும் மகேந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மகேந்திரா தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்துரு ஓவிய கலைஞர் கணேஷ் என்பவரை பாராட்டியுள்ளார். கணேஷ் என்ற இந்த ஓவியர் காஞ்சீபுரத்தைச் சேர்ந்தவர். இவர் ஆனந்த் மகேந்திராவின் உருவத்தை தமிழின் பண்டைய எழுத்துக்கள் உட்பட 741 எழுத்துக்களைக் கொண்டே படமாக வரைந்துள்ளார். இவர் இந்த படத்தை வரைவதை வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஆனந்த் மகேந்திராவை டேக் செய்துள்ளார்.
பண்டைய தமிழ் எழுத்துக்கள் மூலம் வரையப்பட்ட இந்த படம் தனித்துவம் வாய்ந்தது. இது குறித்து உங்களின் கருத்தை அறிந்து கொள்கிறேன் என ட்வீட் செய்துள்ளார். இந்த ட்விட்டர் வீடியோ பதிவை 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் 500க்கும் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன.
இந்நிலையில் கணேஷின் ட்விட்டுக்கு ஆனந்த் மகேந்திர பதில் அளித்து ட்வீட் செய்துள்ளார். இந்த படத்தையும் தமிழ்மொழியின் பிரம்மாண்டத்தை கண்டு வியப்பதாகவும், இந்த படத்தை தனது வீட்டில் வைக்க விரும்புவதாகவும் அவர் அதில் கூறியுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில் "ஆஹா, என் உருப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானது , நான் வியக்கிறேன்.
தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு, உருவாக்கியவரின் பாராட்டாக , உருவ படத்தை என் வீட்டில் வைக்க விருப்பபடுகிறேன்.." எனக் கூறப்பட்டுள்ளது.
தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா ட்விட்டர் வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர். தனித்துவமான விஷயங்கள், சாதனைகளை கண்டறிந்து அதற்கு பாராட்டுகளையும் வெகுமதிகளையும் இவர் தொடர்ந்து வழங்கிவருகிறார்.
இதையும் படிங்க:
எரிபொருள் விலை குறைப்பு என்று மக்களை முட்டாளாக்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்: ராகுல் காந்தி
கோவையைச் சேர்ந்த இட்லி பாட்டி எனப்படும் கமலாத்தால் என்பவர் 80 வயதிலும் இட்லி சுட்டு மிகக் குறைந்த வயதில் விற்பனை செய்யும் விஷயம் ஆனந்த் மகேந்திராவுக்கு தெரிய வர, அந்த பாட்டியின் உழைப்பையும் திறனையும் பாராட்டி சொந்த வீடு ஒன்று கட்டி தந்துள்ளார் ஆனந்த் மகேந்திரா. அதேபோல் ஓவியர் கணேஷும் தனது ஓவியத்திற்காக முதலமைச்சர் ஸ்டாலினிடம் பாராட்டு பெற்றவர் ஆவார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.